பெரம்பலூரில் நாளை கோடைகால கலைப்பயிற்சி வகுப்பு


பெரம்பலூரில் நாளை கோடைகால கலைப்பயிற்சி வகுப்பு
x

கோடைகால கலைப்பயிற்சி வகுப்பு பெரம்பலூரில் நாளை தொடங்குகிறது.

பெரம்பலூர்

தமிழ்நாடு அரசு கலை பண்பாட்டு துறையின் கீழ் பெரம்பலூர் மாவட்ட இசைப்பள்ளியில் இயங்கி வரும் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம் 5 வயது முதல் 16 வயதிற்குட்பட்ட சிறுவர்களுக்கு வாரந்தோறும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம், கராத்தே, மற்றும் சிலம்பம் ஆகிய கலைப் பயிற்சி வகுப்புகள் பெரம்பலூர் மாவட்ட அரசு இசைப்பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டு வருகிறது. பெரம்பலூர் மாவட்ட ஜவகர் சிறுவர் மன்றத்தில் 5 வயது முதல் 16 வயது வரையிலான சிறுவர்களுக்கு நாளை (வெள்ளிக்கிழமை) முதல் 14-ந்தேதி வரை காலை 9 மணி முதல் மதியம் 1 மணி வரை கோடைக்கால கலைப் பயிற்சி முகாம் நடத்தப்படவுள்ளது. இதில் குரலிசை, பரதநாட்டியம், ஓவியம் மற்றும் கராத்தே ஆகிய கலைப்பயிற்சி வகுப்புகள் நடத்தப்படவுள்ளது. இப்பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்களுக்கு பயிற்சி நிறைவு நாளில் பங்கேற்பு சான்றிதழ் வழங்கப்படும். இப்பயிற்சியில் கலந்துகொள்ள விரும்பும் சிறுவர்-சிறுமியர்கள் தங்களது பெற்றோருடன் நாளை காலை 9 மணிக்கு நேரில் வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட தகவலை கலை பண்பாட்டு மைய உதவி இயக்குனர் நீலமேகன் தெரிவித்துள்ளார்.

1 More update

Next Story