நாமக்கல்லில் கோடைமழை


நாமக்கல்லில் கோடைமழை
x

நாமக்கல்லில் கோடைமழை பெய்ததால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாமக்கல்

நாமக்கல் மாவட்டத்தில் இந்த ஆண்டு அக்னி நட்சத்திரம் மழையுடன் தொடங்கியது. தொடர்ந்து வெப்பம் குறைந்து காணப்பட்டு வந்த நிலையில், நாமக்கல் நகரில் நேற்றும் காலை முதலே வானம், மப்பும் மந்தாரமுமாக காட்சி அளித்தது.

மாலை 4 மணி அளவில் திடீரென கோடை மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை லேசான சாரலுடன் ஒரு மணி நேரத்திற்கும் மேலாக நீடித்தது. இதனால் சாலை ஓரங்களிலும், பள்ளமான பகுதிகளிலும் மழைநீர் தேங்கி நிற்பதை பார்க்க முடிந்தது. பொதுமக்கள் குடைபிடித்து செல்வதையும் காண முடிந்தது. இந்த மழையால் இரவில் வெப்பம் தணிந்து, குளிர்ந்த காற்று வீசியது. இதனால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.


Next Story