கோடை கால பயிற்சி முகாம்


கோடை கால பயிற்சி முகாம்
x

மாவட்ட விளையாட்டரங்கத்தில் கோடை கால பயிற்சி முகாம் 1-ந் தேதி தொடங்குகிறது.

புதுக்கோட்டை

புதுக்கோட்டை மாவட்ட விளையாட்டரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் மாவட்ட அளவிலான கோடை கால பயிற்சி முகாம் வருகிற 1-ந் தேதி தொடங்குகிறது. தொடர்ந்து வருகிற 15-ந் தேதி வரை 15 நாட்களுக்கு காலை 6.30 முதல் 8.30 மணி வரையிலும், மாலை 4.30 முதல் 6.30 மணி வரையிலும் தடகளம், கூடைப்பந்து, கால்பந்து, வளைகோல்பந்து மற்றும் கையுந்துபந்து ஆகிய விளையாட்டுகள் மற்றும் மாவட்டத்தில் பிரசித்தி பெற்றுள்ள பெரிய விளையாட்டுகளும் நடைபெற உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ளும் மாணவர்கள் மற்றும் மாணவிகளுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் விளையாட்டு விடுதியில் சேர்வதற்கான அறிவுரை மற்றும் ஆலோசனைகள் வழங்கப்படும். மேலும் பயிற்சி முகாமில் கலந்து கொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தகுதியின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்கள் விளையாட்டு விடுதியில் சேருவதற்கு பரிந்துரை செய்யப்படும். எனவே மாவட்டத்திலுள்ள அரசு உயர், மேல், மெட்ரிக், நடுநிலைப்பள்ளியில் படிக்கும் மாணவ- மாணவிகள் மற்றும் விளையாட்டில் ஆர்வம் உள்ள அனைத்து மாணவ-மாணவிகள் கலந்து கொள்ளலாம். பயிற்சி முகாமில் கலந்து கொள்பவர்கள் தங்களது பெயர்களை அலுவலக வேலை நேரங்களில் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை நேரடியாகவோ அல்லது தொலைபேசி வாயிலாகவோ முன்கூட்டியே பதிவு செய்து கொள்ளலாம். மேலும் பதிவு செய்திட தொடர்புக்கு 04322-222187, தடகள பயிற்றுனர் 8883372389, வளைகோல்பந்து பயிற்றுனர் 7825912554 (அல்லது) நீச்சல் பயிற்றுனர் 9943713554 ஆகியோர்களிடம் தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என கலெக்டர் கவிதாராமு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.


Next Story