கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா


கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா
x

இடைகால், குளோபல் பள்ளியில் கோடைகால பயிற்சி வகுப்பு நிறைவு விழா

தென்காசி

அச்சன்புதூர்:

கடையநல்லூர் அருகில் உள்ள இடைகால் குளோபல் பப்ளிக் சி.பி.எஸ்.இ. பள்ளியில் மாணவ-மாணவிகளுக்கு கோடைகால இலவச சிறப்பு பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் பரதம், ஓவியம் வரைதல், கீபோர்ட் மற்றும் கையெழுத்து பயிற்சி நடைபெற்றது. இப்பயிற்சி வகுப்புகளில் குளோபல் பள்ளி மாணவர்கள் மற்றும் பிற பள்ளி மாணவர்கள் என மொத்தம் 150 மாணவர்கள் கலந்து கொண்டனர். இதன் நிறைவு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. விழாவிற்கு பள்ளி தாளாளர் சேக் உதுமான் தலைமை தாங்கினார். பள்ளி முதல்வர் அந்தோணி பால்ராஜ் வரவேற்று பேசினார். பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ, மாணவிகளுக்கு சான்றிதழ்களும் பயிற்சி ஆசிரியர்களுக்கு நினைவு பரிசும் வழங்கப்பட்டது.

ஆண்டுதோறும் இதுபோன்ற சிறப்பு வகுப்புகள் இந்தாண்டு முதல் பள்ளியின் பாட வகுப்பிலே பரதம், ஓவியம் வரைதல், கீ போர்டு போன்றவை நடத்தப்படும் என பள்ளியின் முதல்வர் தெரிவித்தார்.


Next Story