பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி


பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி
x
தினத்தந்தி 21 May 2023 12:30 AM IST (Updated: 21 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

பள்ளி மாணவர்களுக்கு கோடைகால பயிற்சி

நீலகிரி

குன்னூர்

தமிழகத்தில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கோடை விடுமுறை விடப்பட்டு உள்ளது. இந்த விடுமுறையை பயனுள்ள முறையில் கழிக்க குன்னூர் அருகே உள்ள அருவங்காடு கிளை நூலகத்தில் கோடை கால பயிற்சி முகாம் தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த முகாமில் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு கையெழுத்தை அழகாக எழுதுவது பற்றி ஆங்கில ஆசிரியர் பூபதி விளக்கினார். ஆசிரியர் யோகேஷ் சதுரங்க போட்டி விதிமுறை குறித்து விளக்கினார். மேலும் நூலகர் ஜெயஸ்ரீ மெய்நிகர் நூலகத்தை பற்றி செயல் விளக்கம் கொடுத்தார்.

இதில் பள்ளி மாணவ-மாணவிகள், ஓசட்டி இல்லம் தேடி கல்வி மாணவ-மாணவிகள் பங்கு பெற்று பயனடைந்தனர். இதற்கான ஏற்பாடுகளை அருவங்காடு கிளை நூலக வாசகர் வட்டத்தினர் மற்றும் ஓசட்டி இல்லம் தேடி கல்வி மைய தன்னார்வலர்கள் செய்திருந்தனர்.


Next Story