நீலகிரி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவுக்கு சம்மன்


நீலகிரி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவுக்கு சம்மன்
x
தினத்தந்தி 28 Dec 2022 12:15 AM IST (Updated: 28 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, நீலகிரி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது.

கோயம்புத்தூர்

கோடநாடு கொலை வழக்கு தொடர்பாக, நீலகிரி மாவட்ட முன்னாள் போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பா ஆஜராகுமாறு சி.பி.சி.ஐ.டி. சம்மன் அனுப்பி உள்ளது.

கோடநாடு கொலை, கொள்ளை

முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான எஸ்டேட் நீலகிரி மாவட்டம், கோடநாட்டில் உள்ளது. அங்கு கடந்த 2017-ம் ஆண்டு, ஏப்ரல் மாதம் 24-ந் தேதி கொள்ளை முயற்சி நடந்தது. இதில், கோடநாடு எஸ்டேட்டின் காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் சயான், வாளையாறு மனோஜ், சந்தோஷ் சாமி, தீபு, சதீசன், உதயகுமார், ஜித்தின் ஜாய், ஜம்சீர் அலி, மனோஜ் சாமி, குட்டி என்ற பிஜின் ஆகியோரை கைது செய்தனர். இந்த வழக்கில் தொடர்புடைய டிரைவர் கனகராஜ் சாலை விபத்தில் உயிரிழந்தார்.

தனிப்படை விசாரணை

இது குறித்து நீலகிரி மாவட்ட நீதிமன்றத்தில் கடந்த 5 ஆண்டுக ளாக விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் மேற்கு மண்டல போலீஸ் ஐ.ஜி. சுதாகர், கோவை சரக டி.ஐ.ஜி. முத்துசாமி ஆகியோரின் நேரடி மேற்பார்வையில் 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இந்த வழக்கில் மீண்டும் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.

இந்த வழக்கை பொறுத்தவரை இதுவரை 316 பேரிடம் மறு விசா ரணை நடத்தப்பட்டுள்ளது. குற்றம் சாட்டப்பட்ட, 10 பேர் தவிர, வாகன விபத்தில் இறந்த கனகராஜின் சகோதரர் தனபால், உறவி னர் ரமேஷ், கோடநாடு எஸ்டேட் மேலாளர் நடராஜ், சசிகலா, ஜெயா டிவி தலைமை செயல் அதிகாரி விவேக், முன்னாள் எம்.எல்.ஏ., ஆறுக்குட்டி உள்பட பலரிடமும் விசாரணை நடத்தப்பட்டது.

சி.பி.சி.ஐ.டி.-க்கு மாற்றம்

இந்தநிலையில், கோடநாடு கொலை கொள்ளை வழக்கு சி.பி.சி. ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவுக்கு மாற்றப்பட்டது. கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனிப்படை போலீசார் 316 பேரிடம் நடத்திய விசாரணையில் பெற்ற வாக்குமூலம் மற்றும் 3,600 பக்க குற்றப்பத்திரிகையின் அடிப்படையில் இந்த விசாரணை நடைபெறுகிறது.

போலீஸ் சூப்பிரண்டு மாதவன், கூடுதல் சூப்பிரண்டு முருகவேல் மற்றும் துணை சூப்பிரண்டுகள் இந்த வழக்கை தற்போது விசாரணை நடத்தி வருகிறார்கள்.

முரளிரம்பாவுக்கு சம்மன்

கடந்த 2017-ம் ஆண்டு கோடநாடு எஸ்டேட்டில் கொலை நடை பெற்ற போது, நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக பணி யாற்றியவர் முரளிரம்பா. பின்னர் இவர் தூத்துக்குடி மாவட்டத் துக்கு மாற்றப்பட்டார்.

இந்த நிலையில் மத்திய அரசு இவரை ஆந்திர மாநில சி.பி.ஐ. சூப்பிரண்டாக நியமித்துள்ளது. தற்போது ஆந்திர மாநிலத்தில் பணியாற்றி வருகிறார்.

சில தகவலின் அடிப்படையில் முரளி ரம்பாவுக்கு சி.பி.சி.ஐ.டி. சிறப்பு விசாரணை குழு, சி.பி.ஐ. மூலம் சம்மன் நோட்டீஸ் அனுப்பி உள்ளது. அதில், ஜனவரி முதல் வாரத்தில் சென்னையில் ஆஜராகுமாறு குறிப்பிடப்பட்டு உள்ளது.

நேபாளம் செல்ல திட்டம்

சிறப்பு புலனாய்வு குழுவினர் தற்போது நீலகிரி மற்றும் சேலம் மாவட்டத்தில் முகாமிட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள். கொலை கொள்ளையின்போது படுகாயம் அடைந்து உயிர் பிழைத்த கிருஷ்ணபகதூர் தாபாவை சந்தித்து விசாரணை நடத்த சிறப்பு விசாரணை குழுவினர் நேபாளம் செல்லவும் திட்டமிட்டு உள்ளனர்.


Next Story