சுந்தர பரிபூரண பெருமாள் கோவில் தேரோட்டம்


சுந்தர பரிபூரண பெருமாள் கோவில் தேரோட்டம்
x

வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவில் தேரோட்டம் நடந்தது.

திருநெல்வேலி

வள்ளியூர்:

வள்ளியூர் சுந்தர பரிபூரண பெருமாள் கோவிலில் ஆவணி திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு பூஜைகள், கும்பாபிஷேகம், சிறப்பு அபிஷேக பூஜை, தினமும் பல்வேறு வாகனங்களில் வீதி உலா வருதல் உள்ளிட்டவை நடைபெற்றது. 10-ம் திருநாளான நேற்று தேரோட்டம் நடந்தது. சுவாமி தேரில் எழுந்தருள ஏராளமான பக்தர்கள் பக்தி கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். நான்கு ரதவீதிகளிலும் தேர் வலம் வந்தது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் பெருமாள் பக்தர்கள் குழு மற்றும் மண்டகபடிதாரர்கள் செய்திருந்தனர்.


Next Story