வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கடைஞாயிறு தீர்த்தவாரி

வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவிலில் கடைஞாயிறு தீர்த்தவாரி நடந்தது.
நாகப்பட்டினம்
வேதாரண்யம்:
வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தீர்த்தம், தலம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய பெருமானுக்கு சிவபெருமான் திருமண கோலத்தில் காட்சி அளித்த இடம். வேதங்கள் பூஜித்து மூடி கிடந்த கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார திருப்பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு. பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலில் கார்த்திகை மாத கடைசி ஞாயிற்றுக்கிழமையொட்டி கடைஞாயிறு தீர்த்தவாரி நடந்தது. இதை முன்னிட்டு சூரிய பகவான் அஸ்திர தேவருடன் எழுந்தருளி சேதுபதி மண்டபத்தில் சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்பு அஸ்திர தேவர் மணிகர்ணிகை தீர்த்த குளத்தில் எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெற்றது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story