திருவட்டார் ஆதிகேசவப்பெருமாளின் திருமேனியில் விழுந்தத சூரியஒளி - பக்தர்கள் பரவசம்


திருவட்டார் ஆதிகேசவப்பெருமாளின் திருமேனியில் விழுந்தத சூரியஒளி - பக்தர்கள் பரவசம்
x

திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவில் கருவறையில் விழுந்த சூரிய ஒளியைப் பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர்.

திருவட்டார்,

108 வைணவ திருப்பதிகளில் ஒன்றான திருவட்டார் ஆதிகேசவப் பெருமாள் கோவிலில் ஜூலை 6-ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. அதன் பின் கோவிலுக்கு வரும் பக்தர்கள் கூட்டம் அதிகரித்து வருகிறது.

கோவிலில் புரட்டாசி மாதம் மூன்றாம் தேதி முதல் ஒன்பதாம் தேதிவரை (செப்டம்பர் மாதம் 19 முதல் 25 வரை) மாலையில் அஸ்தமிக்கும் சூரியக்கதிர்கள் கருவறை வரை பாய்ந்து ஆதிகேசவப் பெருமாளிக் திருமேனியில் விழும் அதிசயம் நடைபெறும்.

பெருமாளுக்கு உகந்த புரட்டாசி மாத துவக்கத்தில் மாலைச்சூரியனின் மயக்கும் பொன்னிற கதிர்கள் அனந்த சயனத்தில் பள்ளி கொண்டு அருள்பாலிக்கும் பெருமாளின் திருமேனியில் விழும் வகையில் கோவிலை வடிவமைத்துள்ளனர்.

இன்று மாலை மறையத்துவங்கியிருந்த சூரியனின் மஞ்சள் நிறக்கதிர்கள் கண்களை கூசச்செய்யும் விதத்தில் பாய்ந்து கருவறையில் பெருமாளின் திருமேனியில் விழுந்தது. இதைப் பார்த்து பக்தர்கள் பரவசமடைந்தனர். இந்த அபூர்வ காட்சியை இன்றும் நாளையும் மாலை 6 மணி அளவில் கோவிலுக்கு வந்தால் காணலாம்.

1 More update

Next Story