மேச்சேரி பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்தது


மேச்சேரி பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்தது
x

மேச்சேரி பசுபதீஸ்வரர் கோவிலில் லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழுந்தது.

சேலம்

மேச்சேரி:

மேச்சேரியில் பழமைவாய்ந்த சவுந்தரநாயகி அம்மன் சமேத பசுபதீஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் மூலவர் லிங்கத்தின் மீது ஒவ்வொரு ஆண்டும் மாசி மாதம் 9-ம் தேதி முதல் 15-ந் தேதி வரை காலை சூரிய கதிர்கள் விழுவது வழக்கமாக உள்ளது. அதாவது சூரிய உதயத்தின் போது கோவில் நுழைவுவாயில் உள்பக்கம் உள்ள நந்தி சிலை மீது சூரிய ஒளி பட்டு லிங்கத்தின் மீது சூரிய ஒளி விழும்.

அதேபோல் இந்த ஆண்டு நேற்று காலை கோவில் நுழைவுவாயில் உள் பக்கம் உள்ள நந்தி சிலை மீது சூரிய ஒளி பட்டு லிங்கத்தின் மீதும் சூரிய ஒளி கதிர்கள் விழுந்தது. இதனை தொடர்ந்து சிறப்பு பூஜை, சிறப்பு அலங்காரம் நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story