குற்ற வழக்குகளில் விரைவாக நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் வழங்கினார்


குற்ற வழக்குகளில் விரைவாக நடவடிக்கை எடுத்த போலீசாருக்கு பாராட்டு சான்றிதழ் போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் வழங்கினார்
x
தினத்தந்தி 18 Sept 2023 12:30 AM IST (Updated: 18 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

குற்ற வழக்குகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுத்து அதில் தொடர்புடையவர்களை கைது செய்த போலீஸ் அதிகாரிகளை பாராட்டி போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்.

சிவகங்கை


குற்ற வழக்குகளுக்கு விரைவில் நடவடிக்கை எடுத்து அதில் தொடர்புடையவர்களை கைது செய்த போலீஸ் அதிகாரிகளை பாராட்டி போலீஸ் சூப்பிரண்டு பரிசு வழங்கினார்.

கொலை வழக்கு

சிவகங்கை ஆக்ஸ்போர்டு நகரை சேர்ந்த ராஜா என்பவரை கடந்த 2018-ம் ஆண்டு அவரது வீட்டில் மர்ம நபர்கள் குத்தி கொலை செய்து நகை, பணம் கொள்ளையடித்து சென்றனர். இந்த வழக்கில் நீண்டநாட்களாக சம்பந்தப்பட்டவர்களை கண்டுபிடிக்க முடியாமல் இருந்து வந்தது.

இந்நிலையில் சிவகங்கை நகர் இன்ஸ்பெக்டர் கோட்டைச்சாமி, சப்-இன்ஸ்பெக்டர் ஹரிகிருஷ்ணன் தலைமையிலான தனிப்படையினர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர்.

இதேபோல், காரைக்குடி வடக்கு காவல் நிலைய எல்கைக்குட்பட்ட ஜீவாநகரை சேர்ந்த, பழனி முருகன் என்பவரது வீட்டின் முன்பு பீர் பாட்டிலில் மண்எண்னை ஊற்றி எறிந்த வழக்கில் காரைக்குடி வடக்கு இன்ஸ்பெக்டர் ரவீந்திரன் தலைமையிலான தனிப்படையினர் சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர்.

திருப்பத்தூர் அனைத்து மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சித்திரைச்செல்வி 2 போக்சோ வழக்குகளின் குற்றப்பத்திரிக்கைகளை விரைந்து தாக்கல் செய்து சம்பந்தபட்டவர்களுக்கு நீதிமன்றத்தில் தண்டனை கிடைக்க செய்தார்.

பாராட்டு சான்றிதழ்

தேவகோட்டை கம்பர் தெருவில் கழிவுநீர் தொட்டியில் கிடந்த மண்டை ஓடு மற்றும் எலும்புக் கூடுகள் பெறப்பட்ட கொலை வழக்கில் தேவகோட்டை நகா் இன்ஸ்பெக்டர் சரவணன் தலைமையிலான தனிப்படையினா் சிறப்பாக விசாரணை செய்து கொலைக்கு காரணமானவர்களை கணடறிந்து கைது செய்தனர்.

மானாமதுரை கண்ணார் தெருவில் உள்ள மது கடையில் 371 மதுபாட்டில்களை திருடிய வழக்கில் மானாமதுரை சப்-இன்ஸ்பெக்டர் பூபதிராஜா தலைமையிலான தனிப்படையினர் குற்றவாளிகளை கைது செய்தனர்.

மேலும், சிவகங்கை நகர் மற்றும் சிவகங்கை தாலுகா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் நடைபெற்ற பல்வேறு குற்ற வழக்குகளில் தொடர்புடையவர்களை மாவட்ட தனிப்படை சப்-இன்ஸ்பெக்டர்கள் ராமச்சந்திரன், ரூபன்ராஜ் தலைமையிலான தனிப்படையினர் கைது செய்தனர். இதையொட்டி குற்றவாளிகளை கண்டறிந்தும், திருடுபோன பொருட்களை மீட்டும் திறம்பட செயல்பட்ட போலீசாருக்கு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் பாராட்டி சான்றிதழ்களை வழங்கினார்.


Next Story