ஆரணியில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி செல்லும் பாதையை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு


ஆரணியில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி செல்லும் பாதையை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு
x

ஆரணியில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி செல்லும் பாதையை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

திருவண்ணாமலை

ஆரணியில் ஆர்.எஸ்.எஸ்.பேரணி செல்லும் பாதையை போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு செய்தார்.

ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் சார்பாக அணிவகுப்பு பேரணி நடத்திட தமிழக முழுவதும் நீதிமன்றம் மூலம் தடை செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் ஐகோர்ட்டு மூலம் அனுமதி பெறப்பட்டு (இன்று) தமிழக முழுவதும் உரிய பாதுகாப்புடன் ஆர்.எஸ்.எஸ்.அமைப்பின் அணிவகுப்பு பேரணி நடத்த முடிவு பெற்றது. அதன்படி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 3 மணி அளவில் ஆரணி கொசப்பாளையம் தர்மராஜா கோவில் மைதானத்தில் இருந்து சீருடை அணிந்த ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் 300 நபர்கள் பேண்ட் வாத்தியங்களுடன் நகரின் முக்கிய வீதிகள் வழியாக கொசப்பாளையம் சுந்தரம் தெரு, நேஷனல் டாக்கீஸ் சாலை, தச்சூர் சாலை, காந்தி ரோடு, மார்க்கெட் ரோடு வழியாக ஆரணிப்பாளையம் பகுதியில் உள்ள என்.மகாலில் நிறைவு செய்து அங்கு ஆலோசனைக் கூட்டம் நடைபெறுகிறது.

இந்த நிலையில் பேரணி செல்லும் பாதைகளை திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் நேற்று போலீசாருடன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அப்போது காந்தி ரோட்டில் போலீசார் உரிய பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் தடுப்பு வேலிகள் எங்கு அமைக்கப்பட வேண்டும், கயிறுகள் எங்கு போலீசார் அமைத்து கொள்ள வேண்டும் என்பது குறித்து ஆரணி துணை போலிஸ் சூப்பிரண்டு ரவிச்சந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜன், சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் ஆகியோரிடம் அறிவுறுத்தினார்.


Next Story