'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதா? - எடப்பாடி பழனிசாமிக்கு காங்கிரஸ் கண்டனம்


ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பதா? - எடப்பாடி பழனிசாமிக்கு காங்கிரஸ் கண்டனம்
x

கோப்புப்படம்

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டத்துக்கு ஆதரவு அளிப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமிக்கு காங்கிரஸ் கண்டனம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழக சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- 2018-ம் ஆண்டில் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டம் தொடர்பாக அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் கருத்தை தேசிய சட்ட ஆணையம் கேட்டிருந்தது.

இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. தரப்பில் கலந்துகொண்டவர்கள் 'ஒரே நாடு, ஒரே தேர்தல்' திட்டத்துக்கு தங்கள் எதிர்ப்பை பதிவு செய்தனர். ஆனால் இன்றைக்கு எடப்பாடி பழனிசாமி 'ஒரே நாடு ஒரே தேர்தல்' திட்டத்துக்கு ஆதரவு அளிப்பது எந்த வகையில் நியாயம்? ஆட்சியில் இருக்கும் போது ஒரு பேச்சு, இல்லாதபோது ஒரு பேச்சா? எப்படியாவது ஆட்சி-அதிகாரத்துக்கு வரமாட்டோமா என்ற ஆசையில் இருக்கும் அ.தி.மு.க.வினரை தமிழக மக்கள் ஏற்க மாட்டார்கள், மன்னிக்கவே மாட்டார்கள். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Next Story