கோடநாடு வழக்கு ஆர்ப்பாட்டம் தொடர்பாக சென்னையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை


கோடநாடு வழக்கு ஆர்ப்பாட்டம் தொடர்பாக  சென்னையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை
x

கோடநாடு வழக்கு ஆர்ப்பாட்டம் தொடர்பாக சென்னையில், ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆலோசனை நடத்தினர்.

சென்னை,

கோடநாடு கொலை கொள்ளை வழக்கில் உடனடி விசாரணை நடத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை வழங்க கோரி தமிழகம் முழுவதும் வருகிற 1-ந் தேதி ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு அ.ம.மு.க. ஆதரவு அளித்து உள்ளது.

இந்த நிலையில் ஆர்ப்பாட்டத்தை எவ்வாறு நடத்துவது? என்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் சென்னை எழும்பூரில் மாலை நடந்தது. ஓ பன்னீர்செல்வம் ஆதரவாளரும், முன்னாள் எம்எல்ஏவும் ஆன ஜே.சி.டி.பிரபாகர் தலைமையில் இந்த கூட்டம் நடந்தது. இதில் ஓ.பன்னீர்செல்வம் அணியின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். அ.ம.மு.க. தரப்பில் அக்காட்சி துணை பொதுச்செயலாளரும், முன்னாள் அமைச்சருமான ஜி.செந்தமிழன் தலைமையில் சி.ஆர்.சரஸ்வதி, இல.ராஜேந்திரன் உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

இந்த கூட்டத்தில் எங்கெங்கு ஆர்ப்பாட்டத்தை நடத்துவது? என்னென்ன கோஷங்களை எழுப்பலாம்? ஆர்ப்பாட்டத்தின் போது கோரிக்கைகளை வலியுறுத்தும் வகையில் என்னென்ன முக்கிய அம்சங்களை இடம்பெற செய்வது? என்பன போன்ற பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.தேனியில் ஓ.பன்னீர்செல்வம் தலைமையில் நடக்கும் ஆர்ப்பாட்டத்தில் டி.டி.வி.தினகரன் பங்கேற்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story