சுரண்டை பஸ்நிலைய ரோட்டை சரிசெய்ய வேண்டும்-எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் கோரிக்கை


சுரண்டை பஸ்நிலைய ரோட்டை சரிசெய்ய வேண்டும்-எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் கோரிக்கை
x
தினத்தந்தி 18 March 2023 6:45 PM GMT (Updated: 2023-03-19T00:17:19+05:30)

சுரண்டை பஸ்நிலைய ரோட்டை சரிசெய்ய வேண்டும் என்று பழனிநாடார் எம்.எல்.ஏ.விடம் வியாபாரிகள் கோரிக்கை விடுத்தனர்.

தென்காசி

சுரண்டை:

தென்காசி தொகுதி எம்.எல்.ஏ. பழனி நாடாரிடம் சுரண்டை நகர வியாபாரிகள் பேரவை சார்பில் மனு வழங்கப்பட்டது. அதில், "கடந்த ஒரு வாரத்திற்கு முன்பாக சுரண்டை பஸ்நிலைய ரோடு புதிதாக போடப்பட்டது. இந்த ரோடு தரம் இல்லாமல் போடப்பட்டுள்ளதால் பல இடங்களில் பெயர்ந்து காணப்படுகிறது. இதனால் ரோட்டில் நடந்து செல்பவர்கள், இருசக்கர வாகன ஓட்டிகள் மிகவும் அவதிப்படுகிறார்கள். மேலும் தற்போது கோடை மழை பெய்ய இருப்பதால், ரோடு, மழைக்கு தாக்குப்பிடிப்பதாக தெரியவில்லை. எனவே உடனடியாக அந்த ரோட்டை சரிசெய்ய ஆவன செய்ய வேண்டும்" என்று கூறப்பட்டுள்ளது.

அப்போது, தமிழ்நாடு வியாபாரிகள் பேரவை சுரண்டை கிளை தலைவர் எஸ்.கே.ராமசாமி, சுரண்டை வட்டார ஓட்டுனர் சங்க தலைவர் தங்கேஸ்வரன், சுரண்டை நாடார் வாலிபர் சங்க தலைவர் அண்ணாமலை கனி, தமிழ்நாடு வியாபாரிகள் பேரவை மாவட்ட பொறுப்பாளர் ஆர்.வி.ராமர், சுரண்டை பொறுப்பாளர்கள் ஏ.கே.எஸ்.ஜெயக்குமார், சி.எம்.சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.


Next Story