பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்


பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம்
x
தினத்தந்தி 29 Oct 2022 12:15 AM IST (Updated: 29 Oct 2022 12:16 AM IST)
t-max-icont-min-icon

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் நாளை சூரசம்ஹாரம் நிகழ்ச்சி நடக்கிறது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

பாவூர்சத்திரம் வென்னிமலை முருகன் கோவிலில் கந்த சஷ்டி விழா கொடியேற்றத்துடன் தொடங்கி தினமும் யாகசாலை பூஜைகள், அபிஷேகம், அலங்காரம், சுவாமி சப்பரத்தில் கோவிலை வலம் வருதல் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வருகின்றன. நாளை (ஞாயிற்றுக்கிழமை) சூரசம்ஹாரம் நடைபெறுகிறது. அதனை முன்னிட்டு காலை 8 மணி முதல் மதியம் 12.30 மணிவரை கும்ப ஜெபம், மூலமந்திர ஹோமம், யாகசாலை பூஜை, சஷ்டி ஹோமம், தீபாராதனை நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு யாகசாலை பூஜையை தொடர்ந்து ஹோமம் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து கோவில் வளாகத்தில் சூரசம்ஹார நிகழ்ச்சி நடக்கிறது. இரவு 7 மணிக்கு மகா பூர்ணாஹூதி, சுவாமிக்கு அபிஷேகம், தீபாராதனை நடைபெறுகிறது இதற்கான ஏற்பாடுகளை கோவில் விழா கமிட்டியினர் செய்துள்ளனர். 31-ந்தேதி (திங்கட்கிழமை) சுவாமி திருக்கல்யாணம் நடைபெறுகிறது.

1 More update

Next Story