ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எறையூர் தேவனேரி ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்


ஸ்ரீபெரும்புதூர் அடுத்த எறையூர் தேவனேரி ஏரியில் உபரி நீர் வெளியேற்றம்
x

எறையூர் தேவனேரி ஏரி அதன் முழு கொள்ளளவையும் எட்டியுள்ள நிலையில் உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

காஞ்சிபுரம்

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் சுற்றுவட்டார பகுதிகளில் கடந்த 3 நாட்களாக இரவு நேரத்தில் விட்டு விட்டு மழை பெய்து வருவதால் ஏரிகளுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில் எறையூர் தேவனேரி ஏரி முழுவதும் நீர் நிரம்பி உள்ளது. இதனால் ஏரியின் உபரி நீர் கலங்கல் வழியாக வெளியேறுகிறது. நீர்வீழ்ச்சியில் இருந்து நீர் வெளியேறி வருவது போல் வருவதால் இப்பகுதியில் மக்கள் ஆர்வமுடன் பார்த்துச் சென்றனர். மேலும் நீர் வெளியேறும் பகுதியில் அப்பகுதியைச் சேர்ந்த இளைஞர்கள் ஆர்வமுடன் வலை மற்றும் மீன்பிடி உபகரணங்கள் மூலம் மீன் பிடித்தனர்.

1 More update

Next Story