ஆடி அமாவாசையை முன்னிட்டு பவானியில் 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்; ஆலோசனை கூட்டத்தில் முடிவு


ஆடி அமாவாசையை முன்னிட்டு பவானியில் 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள்; ஆலோசனை கூட்டத்தில் முடிவு
x

ஆடிப்பெருக்கு, அமாவாசையை முன்னிட்டு பவானியில் 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது என்று ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஈரோடு

பவானி

ஆடிப்பெருக்கு, அமாவாசையை முன்னிட்டு பவானியில் 50 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்படுகிறது என்று ஆலோசனை கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.

ஆடிப்பெருக்கு

ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதத்தில் வருகிற ஆடிப்பெருக்கு மற்றும் ஆடி அமாவாசை அன்று பவானி சங்கமேஸ்வரர் கோவில், கூடுதுறைக்கு ஏராளமானோர் வந்து முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் உள்பட பல்வேறு பரிகார பூஜைகள் செய்து வழிபாடு ெசய்வார்கள்.

அதன்படி இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு வருகிற 17-ந் தேதியும், ஆடி அமாவாசை ஆகஸ்டு 15-ந் தேதியும் வருகிறது. அப்போது ஏராளமானோர் பவானி கூடுதுறை, சங்கமேஸ்வரர் கோவிலுக்கு வருவார்கள் என்று கூறப்படுகிறது.

முன்எச்சரிக்கை பணி தீவிரம்

மேலும் கடந்த ஆண்டு காவிரியில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடிய நிலையில் ஆடிப்பெருக்கு மற்றும் அமாவாசை தினங்களில் பக்தர்கள் கரையோரங்களில் பரிகாரங்கள் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது காவிரி ஆற்றில் வினாடிக்கு 10 ஆயிரம் கன அடி வீதம் தண்ணீர் சென்று கொண்டிருக்கிறது.

இதனால் பக்தர்கள் அதிகமானோர் வருகை தந்து காவிரி ஆற்றில் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு திதி, தர்ப்பணம் போன்ற பல்வேறு பரிகார பூஜைகள் செய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுவதால் பல்வேறு முன்எச்சரிக்கை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

ஆலோசனை கூட்டம்

இதைத்தொடர்ந்து அவர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்குவது குறித்து கோவில் நிர்வாகத்தின் சார்பில் பவானி தாசில்தார் அலுவலகத்தில் ஆலோசனை கூட்டம் நடந்தது. கூட்டத்துக்கு தாசில்தார் தியாகராஜன் தலைமை தாங்கினார்.

பவானி துணை போலீஸ் சூப்பிரண்டு அமிர்தவர்ஷினி தலைமையில் 200 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதற்காக பவானி நகரில் முக்கிய பகுதிகளில் 50-க்கும் மேற்பட்ட இடங்களில் ரகசிய கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட திட்டமிடப்பட்டுள்ளது.

மருத்துவ வசதி

மேலும் 25 தீயணைப்புத் துறை வீரர்கள் மூலம் ஆண்கள் மற்றும் பெண்கள் படித்துறை ஆகிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்துவது. எந்தவிதமான உயிர் சேதம் ஏற்படாமல் தடுப்பது. 108 ஆம்புலன்ஸ் உடன் மருத்துவ வசதி ஏற்படுத்தி கொடுப்பது. பவானி நகராட்சி நிர்வாகத்தின் மூலம் தூய்மை பணியை மேற்கொள்வது. மின்சார துறை மூலம் மின்தடை ஏற்படாமல் பார்த்துக் கொள்வது குறித்து விவாதிக்கப்பட்டது.

இதில் வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, சங்கமேஸ்வரர் கோவில் நிர்வாகத்தினர், பவானி போலீசார், தீயணைப்பு துறை, சுகாதாரத்துறை, நகராட்சி நிர்வாகம் மற்றும் மின்சார துறை போன்ற பல்வேறு துறைகளைச் சேர்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story