ரூ.6 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்- அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்


ரூ.6 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்கள்- அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்
x

ரூ.6 லட்சத்தில் கண்காணிப்பு கேமராக்களை அமைச்சர் மூர்த்தி தொடங்கி வைத்தார்.

மதுரை

புதூர்

புதூர் அருகே மகாலட்சுமி நகர் குடியிருப்பு பகுதியில் மாநகராட்சி பங்களிப்புடன் நமக்கு நாமே திட்டத்தில் பொதுமக்கள் இணைந்து ரூ.6 லட்ச மதிப்பில் குற்ற நடவடிக்கை தடுக்க கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட்டது. இதனை அமைச்சர் மூர்த்தி, மாநகராட்சி கமிஷனர் தொடங்கி வைத்தனர். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி கமிஷனர் பிரவீன் குமார் முன்னிலை வகித்தார். இந்நிகழ்ச்சியில் மதுரை மாநகராட்சி கிழக்கு மண்டல தலைவர் வாசுகி சசிகுமார், மற்றும் கவுன்சிலர்கள் பால்செல்வி பாலகிருஷ்ணன், ராதிகா கவுரி சங்கர், ராமமூர்த்தி, செங்கிஸ்கான், உத்தங்குடி தன்ராஜ், ஸ்டாலின், தலைவர், மைக்கேல் குரூப் கல்வி நிறுவனங்கள், பகுதி செயலாளர்கள் சசிகுமார், கவுரிசங்கர், வட்ட செயலாளர்கள் பாலகிருஷ்ணன், மணி, தல்லாகுளம் காவல் துறை அதிகாரி பாலமுருகன், அனைத்து குடியிருப்போர் நல சங்கங்கள்,

மதுரை மாநகராட்சி உதவி ஆணையாளர் காளிமுத்தன், உதவி செயற்பொறியாளர் சேவியர், சுகாதார அதிகாரி ராஜ்கண்ணன்,

உதவி பொறியாளர்கள் மணியன், முருகன் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பேராசிரியர் முருகேசன் தலைமையில் நிர்வாகிகள், வீரபாகு, செல்வராஜ், .ஜெகதீசன், ஜெயக்குமார், அழகுராஜ் செய்து இருந்தனர். முடிவில் பொருளாளர் ராஜேந்திரன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story