செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் ஆய்வு


செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் ஆய்வு
x

செங்கல்பட்டு மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அதிகாரிகளுடன் நேரில் சென்று சீரமைக்கப்பட்ட குளத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

செங்கல்பட்டு

செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் அடுத்துள்ள பட்டிபுலம் ஊராட்சியில் உள்ள ஆலடியம்மன் கோவில் அருகில் 1½ ஏக்கர் பரப்பளவில் உள்ள கிராம குளம் இந்த பகுதி மக்களின் நிலத்தடி நீர் ஆதாரமாக உள்ள குளமாகும். இந்த குளம் கடந்த பல ஆண்டுகளாக எந்தவித பயன்பாடு, பராமரிப்பின்றி வறண்டு காணப்பட்டது. இதையடுத்து அண்ணா மறுமலர்ச்சி திடடத்தின் கீழ் இந்த குளத்தை தூர் வாரி சீரமைக்க ரூ.12.33 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து பொக்லைன் எந்திரம் மூலம் இந்த குளத்தில் உள்ள முட்புதர்கள் அகற்றி கரைகள் பலப்படுத்தப்பட்டு, கற்கள் பதிக்கப்பட்டு குளம் சீரமைக்கப்பட்டது.

சீரமைக்கப்பட்ட இந்த குளத்தை தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் பொன்னையா அதிகாரிகளுடன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

அவருடன் ஊரக வளர்ச்சி திட்ட இயக்குனர் இந்துபாலா, திருப்போரூர் வட்டார வளர்ச்சி அலுவலர் பூமகள்தேவி, பட்டிபுலம் ஊராட்சிமன்ற தலைவர் வரலட்சுமி லட்சுமிகாந்தன், துணைத்தலைவர் வள்ளிசெந்தில், ஊராட்சி வார்டு உறுப்பினர் தனலட்சுமிவேதகிரி உள்ளிட்ட பலர் வந்திருந்தனர்.


Next Story