நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு
சங்கரன்கோவிலில் நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஆய்வு செய்தார்.
தென்காசி
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவிலில் நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு கோட்டப்பணிகளை சென்னை நெடுஞ்சாலைத்துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு தலைமை பொறியாளர் சந்திரசேகரன் நேற்று ஆய்வு செய்தார். அப்போது, திட்டப்பணிகள், வடகிழக்கு பருவ மழைக்கால முன்னேற்பாடு ஆயத்த பணிகள், சாலைகள் பராமரிப்பு குறித்து ஆய்வு செய்தார்.
மேலும் சாலை ஓரங்களில் மரக்கன்றுகளை நட்டு வளர்ப்பதை ஊக்குவிக்கும் வகையில் மரக்கன்றுகளை நட்டினார். திட்டப்பணிகளை விரைந்து முடிக்க ஆலோசனை வழங்கினார்.
இந்த ஆய்வின் ேபாது, தென்காசி நெடுஞ்சாலை துறை கட்டுமானம் மற்றும் பராமரிப்பு துறை கோட்ட பொறியாளர் ராஜசேகர், சங்கரன்கோவில் உதவி கோட்ட பொறியாளர் உலகம்மாள், உதவி பொறியாளர்கள் பலவேசம், முத்துமணி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
Related Tags :
Next Story