ெரயில் விபத்தில் உயிர் தப்பிய 28 பேர், விமானங்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு


ெரயில் விபத்தில் உயிர் தப்பிய 28 பேர், விமானங்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பு
x

ெரயில் விபத்தில் உயிர் தப்பிய 28 பேர், விமானங்கள் மூலம் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

மதுரை


மதுரையில் நேற்று முன்தினம் சுற்றுலா ரெயில் பெட்டியில் ஏற்பட்ட தீ விபத்தில் உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த 9 பேர் உயிரிழந்தனர். மேலும் இந்த தீ விபத்தில் இருந்து உயிர் தப்பிய பயணிகள், மதுரை ரெயில் நிலையத்தில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர். அவர்களிடம் பாதுகாப்பு ஆணையர் மற்றும் போலீசார் நேற்று விசாரணை நடத்தினர். இந்த விசாரணைக்கு பின் அவர்கள் அனைவரும் ரெயில்வே துறை மூலம் அவர்கள் சொந்த ஊருக்கு விமானம் மூலம் அனுப்பி வைக்கப்பட்டனர். மொத்தம் 28 பேர் மதுரையில் இருந்து விமானம் மூலம் நேற்று புறப்பட்டு சென்றனர். அவர்களை மேயர் இந்திராணி வழிஅனுப்பி வைத்தார். முன்னதாக உயிரிழந்தவர்களின் உடல்கள் நேற்று முன்தினம் இரவு சென்னை கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து பெங்களூரு வழியாக நேற்று லக்னோ கொண்டு செல்லப்பட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டன. அதற்கிடையில் லக்னோ விமான நிலையத்தில் இறந்தவர்களின் உடல்களை அந்த மாநிலத்தின் துணை முதல்-மந்திரி பிரஜேஷ் பதக் பெற்று கொண்டார். பின்னர் அவர் உடல்களை சம்பந்தப்பட்ட குடும்பத்தினரிடம் ஒப்படைத்து ஆறுதல் கூறினார்.

மேலும் அந்த மாநில அரசின் சார்பில் அறிவிக்கப்பட்டு இருந்த ரூ.2 லட்சம் நிவாரண தொகையை வழங்கினார். அதே போல் விபத்தில் இருந்து உயிர் தப்பிய பயணிகளை அழைத்து செல்லவும் லக்னோ விமான நிலையத்தில் அவர்களது உறவினர்கள் குவிந்து இருந்தனர்.


Next Story