ஆவின் துணை மேலாளர் பணியிடை நீக்கம்
ஆவின் துணை மேலாளர் பணியிடை நீக்கம் ெசய்யப்பட்டார்.
மதுரை
மதுரை ஆவின் நிறுவனத்தில் இருந்து மதுரை மற்றும் அருகில் உள்ள மாவட்டங்களுக்கு பால் மற்றும் பால் பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இந்த நிலையில் பழனியில் வினியோகம் செய்யப்பட்டு இருந்த பால் பாக்கெட் ஒன்றில் ஈ இருப்பது தெரியவந்தது. இதுகுறித்து மதுரை ஆவின் நிறுவனத்தில் புகார் செய்யப்பட்டது. இந்த புகார் குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பாலை பாக்கெட்டில் அடைக்கும் பணியினை மேற்கொண்ட தனியார் நிறுவனத்தின் கவனக்குறைவு இருப்பது தெரியவந்தது. எனவே அந்த நிறுவனத்திற்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதோடு இந்த பணிக்கு பொறுப்பு அதிகாரியான துணை மேலாளர் சிங்காரவேலு பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதற்கான உத்தரவை ஆவின் பொது மேலாளர் சாந்தி பிறப்பித்துள்ளார்.
Related Tags :
Next Story