கல்லூரி வளாகத்தில் மரங்களை வெட்டிய விவகாரம் ராசிபுரம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் பணி இடைநீக்கம்


கல்லூரி வளாகத்தில் மரங்களை வெட்டிய விவகாரம்  ராசிபுரம் அரசு கலைக்கல்லூரி முதல்வர் பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 17 Dec 2022 12:15 AM IST (Updated: 17 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

ராசிபுரம்:

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே ஆண்டகளூர் கேட்டில் திருவள்ளுவர் அரசு கலைக்கல்லூரி உள்ளது. கல்லூரியின் முதல்வராக பங்காரு (பொறுப்பு) இருந்து வருகிறார். இவர் கல்லூரி வளாகத்தில் இருந்த மரங்களை அனுமதியின்றி வெட்டி விற்பனை செய்ததாக புகார் எழுந்தது. மரங்களை வெட்டி விற்பனை செய்ததற்காக நாமக்கல் உதவி கலெக்டர் மஞ்சுளா ரூ.2.18 லட்சம் அபராதம் விதித்தார். அரசியல் கட்சியினர் அவரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டும் என்று ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்த நிலையில் கல்லூரி முதல்வர் பங்காருவை உயர்கல்வி துறை அரசு முதன்மை செயலாளர் கார்த்திகேயன் பணி இடைநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.


Next Story