அரசு மாணவர் விடுதி வார்டன் பணியிடை நீக்கம்


அரசு மாணவர் விடுதி வார்டன் பணியிடை நீக்கம்
x

கலசபாக்கத்தில் அரசு மாணவர் விடுதி வார்டன் பணியிடை நீக்கம்

திருவண்ணாமலை

கலசபாக்கத்தில் அரசு ஆதிதிராவிடர் மாணவர்கள் விடுதி உள்ளது. இந்த விடுதியின் வார்டனாக ரவி என்பவர் பணியாற்றி வந்தார்.

இந்த நிலையில் இன்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் இந்த மாணவர் விடுதியை நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு செய்தார்.

அப்போது விடுதியில் சேர்க்கப்பட்டுள்ள 23 மாணவர்களில் 13 மாணவர்கள் மட்டுமே விடுதியில் தங்கி இருந்தது தெரிய வந்தது.

மேலும் முறையான ஆவணங்கள் விடுதியில் பராமரிக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது.

இதனால் விடுதியின் வார்டன் ரவியை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் உத்தரவிட்டார்.


Next Story