தாரமங்கலம் அருகே கோவில் தகராறில்பூசாரியை தாக்கிய போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம்
தாரமங்கலம் அருகே கோவில் தகராறில் பூசாரியை தாக்கிய போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம்
தாரமங்கலம் அருகே கோவில் தகராறில் பூசாரியை தாக்கிய போலீஸ் ஏட்டு பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
தகராறு
தாரமங்கலம் அருகே ஓலைப்பட்டி காட்டுவளவு பரியம்பட்டி கிராமத்தில் முனியப்பன் கோவிலில் கட்டுமான பணிகள் நடந்து வருகிறது. இந்த கோவில் பூசாரியாக ரமேஷ் (வயது 45) என்பவர் உள்ளார்.
கோவிலில் நடக்கும் பணிகள் தொடர்பாக அதே பகுதியை சேர்ந்த மாநகர போலீஸ்துறையில் பணிபுரியும் போலீஸ் ஏட்டு முருகன் தரப்பினருக்கும், பூசாரிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.
பின்னர் அவர்கள் பூசாரி ரமேசை ஆயுதங்களால் அடித்து தாக்கியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பணி இடைநீக்கம்
இதனிடையே, பூசாரி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என வலியுறுத்தி ஊர்பொதுமக்கள் தாரமங்கலம் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதன்பிறகு இந்த சம்பவம் தொடர்பாக போலீஸ் ஏட்டு முருகன் உள்பட 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
இந்நிலையில், மாநகர நுண்ணறிவு பிரிவில் பணியாற்றி வரும் போலீஸ் ஏட்டு முருகனை பணி இடைநீக்கம் (சஸ்பெண்டு) செய்து நேற்று போலீஸ் கமிஷனர் விஜயகுமாரி உத்தரவிட்டார்.