சேலம் அருகே கலெக்டர் விழாவில் மேடை சரிந்த விவகாரம்:கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம்
சேலம் அருகே கலெக்டர் விழாவில் மேடை சரிந்த விவகாரம் தொடர்பகா கிராம நிர்வாக அலுவலர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டார்.
சேலம்
சேலம்
சேலம் அருகே முருங்கப்பட்டியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு மக்கள் சந்திப்பு முகாம் நடைபெற்றது. கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். இதில் பார்த்திபன் எம்.பி., ராஜமுத்து எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் பொதுமக்களிடம் குறைகள் கேட்கப்பட்டது. அங்கு நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டன.அப்போது பாரம் தாங்காமல் மேடை திடீரென கீழே சரிந்தது. இதுதொடர்பாக உதவி கலெக்டர் அம்பாயிரநாதன் விசாரணை நடத்தினார். விழா ஏற்பாடுகளை சரிவர கவனிக்காத முருங்கப்பட்டி கிராம நிர்வாக அலுவலர் கண்ணனை பணி இடைநீக்கம் செய்து உதவி கலெக்டர் உத்தரவிட்டார். தொடர்ந்து துறை ரீதியான விசாரணையும் நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story