சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா இன்று பதவியேற்பு


சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா இன்று பதவியேற்பு
x

சென்னை ஐகோர்ட்டு புதிய தலைமை நீதிபதியாக எஸ்.வி.கங்காபூர்வாலா இன்று பதவியேற்க உள்ளார்.

சென்னை,

சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக, மும்பை ஐகோர்ட்டின் பொறுப்பு தலைமை நீதிபதியாக இருந்து வந்த சஞ்சய் விஜய்குமார் கங்காபூர்வாலாவை நியமித்து ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று முன்தினம் உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து எஸ்.வி.கங்காபூர்வாலா, தலைமை நீதிபதியாக இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு பதவியேற்கிறார். சென்னை கிண்டியில் உள்ள ராஜ்பவனில் கவர்னர் ஆர்.என்.ரவி, எஸ்.வி.கங்காபூர்வாலாவுக்கு பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் ஐகோர்ட்டு நீதிபதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொள்கின்றனர்.


Next Story