நரசிம்மர் கோவிலில் சுவாதி பூஜை


நரசிம்மர் கோவிலில் சுவாதி பூஜை
x
தினத்தந்தி 12 Feb 2023 6:45 PM GMT (Updated: 2023-02-13T00:15:23+05:30)

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி பூஜை நடந்தது.

தென்காசி

பாவூர்சத்திரம்:

கீழப்பாவூர் நரசிம்மர் கோவிலில் சுவாதி நட்சத்திர பூஜை நடைபெற்றது. இதையொட்டி மாலை 3 மணி முதல் 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஸ்ணு சூக்த ஹோமம், மன்யு சூக்த ஹோமம், பாக்ய சூக்த ஹோமம், மகாலட்சுமி ஹோமம், சிறப்பு அபிசேகமும், தொடர்ந்து பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம் வருதல், தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினர் செய்திருந்தனர்.


Next Story