பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேஜைகள்; எம்.எல்.ஏ. வழங்கினார்
சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேஜைகளை இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. வழங்கினார்.
சேரன்மாதேவி:
சேரன்மாதேவி பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு மேஜைகள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் பரமசிவன் தலைமை தாங்கினார். உதவி தலைமை ஆசிரியர் சகாய ஜெனி முன்னிலை வகித்தார். இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து சுமார் ரூ.11 லட்சம் மதிப்பீட்டில் 75 மேஜைகளை பள்ளிக்கு வழங்கினார்.
இதில் மாவட்ட நாட்டு நலப்பணித்திட்ட தொடர்பு அலுவலர் ஆறுமுகச்சாமி, மாவட்ட இலக்கிய அணி செயலாளர் கூனியூர் மாடசாமி, ஒன்றிய செயலாளர் மாரிச்செல்வம், நகர செயலாளர் வக்கீல் பழனிகுமார், கூட்டுறவு வங்கி தலைவர் முருகன் நயினார், முன்னாள் நகர செயலாளர் ஐசக் பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விக்கிரமசிங்கபுரம் அருகே உள்ள அடையக்கருங்குளம் ஊராட்சியில் ரூ.12.3 லட்சம் மதிப்பில் புதிதாக ரேஷன் கடை கட்டப்படுகிறது. இதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இசக்கி சுப்பையா எம்.எல்.ஏ. அடிக்கல் நாட்டினார்.
இதில் அடையக்கருங்குளம் பஞ்சாயத்து தலைவர் ராஜேஸ்வரி, துணைத் தலைவர் மதன கிருஷ்ணன், அம்பை ஒன்றிய செயலாளர் விஜயபாலாஜி, துணைச் செயலாளர் பிராங்கிளின், மணிமுத்தாறு பேரூராட்சி முன்னாள் தலைவர் சிவன்பாபு, அ.தி.மு.க. தொழிற்சங்க செயலாளர் கைகண்டார், தெற்கு பாப்பான்குளம் பஞ்சாயத்து தலைவர் இசக்கிமுத்து, அம்பை ஒன்றிய பணி மேற்பார்வையாளர் சங்கர சுப்பிரமணியன், மணிமுத்தாறு நகர செயலாளர் ராமையா, இளைஞர் அணி சண்மு, காண்டிராக்டர் கிருஷ்ணன், ஊராட்சி செயலர் சுரேகா, ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.