விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது
மணப்பாறை அருகே விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார்.
துவரங்குறிச்சி, அக்.4-
மணப்பாறை அருகே விவசாயியிடம் ரூ.10 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் தாசில்தார் கைது செய்யப்பட்டார்.
விவசாயி
திருச்சி மாவட்டம் மணப்பாறையை அடுத்த மருங்காபுரி அருகே மஞ்சம்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது மகன் சுப்பிரமணியன். விவசாயியான இவருக்கு மஞ்சம்பட்டியில் 13 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
இந்த விவசாய நிலத்திற்கு அருகே துவரங்குறிச்சியில் இருந்து செந்துறை செல்லும் சாலை உள்ளது. இந்த சாலையில் இருந்து இவரது நிலம் வழியாக மின்சார கம்பி செல்கிறது. இந்த கம்பி அங்குள்ள பொதுபாதையில் இருந்த மரத்தின் கிளைகள் மீது உரசியபடி சென்றதால், அந்த மரக்கிளைகளை கடந்த மாதம் (செப்டம்பர்) 25-ந்ேததி சுப்பிரமணியன் வெட்டி உள்ளார்.
ரூ.10 ஆயிரம் லஞ்சம்
இதை அறிந்த மருங்காபுரி தாசில்தார் லட்சுமி சம்பவ இடத்துக்கு வந்து சுப்பிரமணியனிடம், அனுமதி பெறாமல் ஏன் மரத்தை வெட்டினீர்கள். இது தொடர்பாக உங்கள் மீது போலீசில் புகார் செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். மேலும் உங்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க வேண்டும் என்றால் ரூ.10 ஆயிரம் லஞ்சம் தரவேண்டும் என்று தெரிவித்தாராம்.
ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத சுப்பிரமணியன் இது குறித்து திருச்சி லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு மணிகண்டன் தலைமையிலான போலீசாரின் ஆலோசனையின் பேரில் சுப்பிரமணியன் ரசாயன பவுடர் தடவப்பட்ட ரூ.10 ஆயிரத்தை தாசில்தார் லட்சுமியிடம் கொடுத்தார்.
அப்போது, அங்கு மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், தாசில்தார் லட்சுமி லஞ்சப் பணம் வாங்கும்போது, அவரை கையும், களவுமாக பிடித்து கைது செய்தனர். இதற் கிடையில் உயர் ரத்த அழுத்தத் தால் பாதிக்கப் பட்ட தாசில்தார் லட்சுமி மணப் பாறை அரசு ஆஸ்பத்தி ரியில் சிகிச்சைக்காக சேர்க்கப் பட்டார். இந்த சம்பவத்தால் மருங்காபுரி தாசில்தார் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.