மூதாட்டியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று நகை பறிப்பு


மூதாட்டியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று நகை பறிப்பு
x

மூதாட்டியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று நகை பறிப்பு

கோயம்புத்தூர்

கோவை

கோவையில் முகவரி கேட்ட மூதாட்டியை இருசக்கர வாகனத்தில் அழைத்துச்சென்று நகை பறித்த மர்ம ஆசாமியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

இந்த சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

மூதாட்டி

கோவை அருகே உள்ள பன்னிமடையை சேர்ந்தவர் நஞ்சம்மாள் (வயது 62). இவர் கோவையில் உள்ள சித்தநாயக்கன்பாளையத்தை சேர்ந்த உறவினர் வீட்டுக்கு செல்வதற்காக பஸ் மூலம் உக்கடம் பஸ் நிலையம் வந்தார். பின்னர் அவர் அங்கு இருசக்கர வாகனத்தில் நின்றிருந்த முதியவர் ஒருவரிடம் சித்தநாயக்கன்பாளையத்துக்கு எப்படி செல்ல வேண்டும் என்று கேட்டு உள்ளார்.

அதற்கு அந்த நபர், நான் அங்குதான் செல்கிறேன், என்னுடன் வாருங்கள் என்று கூறினார். இதையடுத்து அந்த முதியவர், நஞ்சம்மாளை தனது இருசக்கர வாகனத்தில் ஏற்றிக்கொண்டு கோவை-திருச்சி ரோட்டில் சென்று கொண்டு இருந்தார். அப்போது அந்த முதியவர் மீது அவருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவர், தான் கழுத்தில் 1 ½கிடந்த பவுன் நகையை கழற்றி தனது கைப்பையில் வைத்துக்கொண்டார்.

நகை பறிப்பு

ராமநாதபுரம் சிக்னல் அருகே வந்தபோது, நான் இங்கு இறங்கி பஸ்சில் செல்கிறேன் என்று நஞ்சம்மாள் கூறி உள்ளார். இதையடுத்து அந்த நபர் சாலை ஓரத்தில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தி, அவரை இறக்கிவிட்டார். அத்துடன் அவர் கையில் வைத்திருந்த பையை பறித்துவிட்டு மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த நஞ்சம்மாள், இது குறித்து ராமநாதபுரம் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நஞ்சம்மாளிடம் நகையை பறித்துச்சென்ற மர்ம ஆசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள். இது குறித்து போலீசார் கூறும்போது, உக்கடம் பஸ்நிலையத்தில் இருந்து ராமநாதபுரம் சிக்னல் வரை உள்ள பகுதிகளில் இருக்கும் கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. விரைவில் அந்த ஆசாமியை பிடித்து விடுவோம் என்றனர்.



Next Story