பள்ளிப் படிப்பில் சபதம் ஏற்றுவெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்த ஆனைமலை வாலிபர்
பள்ளிப் படிப்பில் சபதம் ஏற்று வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்த ஆனைமலை வாலிபர்
ஆனைமலை
கோவை மாவட்டம் ஆனைமலை குப்பிச்சிபுதூர் பகுதியைச் சேர்ந்த தண்டபாணி - கிருஷ்ணவேணி என்பவரது மகன் சவுத்ரி ராஜ் (வயது 30) இவர் ரோபோடிக் என்ஜினீயரிங் வேலை செய்து வருகிறார். இவர் கடந்த 2015-ம் ஆண்டு மெக்சிகோ நாட்டிற்கு வேலைக்காக சென்றார். அப்போது இவரும் மெக்சிகோ நாட்டை சேர்ந்த எட்கர் சன்சேஸ் - மரியா எலெனா என்பவரது மகள் டனியாலா (30) என்பவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்த்து வந்தனர். அப்போது இவர்கள் 2 பேருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு காதலாக மலர்ந்தது. இவர்கள் 2 பேரும் கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் தாங்கள் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக வீட்டில் பெற்றோரிடம் தெரிவித்தனர். இருவர் வீட்டிலும் காதலை ஏற்றுக் கொண்டதோடு திருமணம் செய்து வைக்க முடிவு செய்தனர். அதன்படி நேற்று குப்பிச்சிபுதூரில் உள்ள அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் இந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது. இதில் உறவினர்கள் மற்றும் வெளிநாட்டில் இருந்து வந்தவர்கள் மணமக்களை வாழ்த்தினார்கள்.
இதுகுறித்து மனமகன் சவுத்ரி ராஜ் கூறுகையில், நானும், டனியாலா
கடந்த 7 ஆண்டுகளாக காதலித்து வந்தோம். எங்களது காதலுக்கு பெற்றோர் பச்சைக் கொடி காட்டியதோடு, திருமணமும் செய்து வைத்து உள்ளது மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும், நான், பள்ளியில் படிக்கும்போது திருமணம் செய்தால் வெளிநாட்டுப் பெண்ணை தான் திருமணம் செய்வேன் என சபதம் எடுத்தேன். அதன்படியே வெளிநாட்டு பெண்ணை திருமணம் செய்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது என்றார்.