தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி அரசு பஸ்சில் 2 பெண்களிடம் நகை பறிப்பு
கோவையில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி அரசு பஸ்சில் 2 பெண்களிடம் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
கோவையில் தீபாவளி கூட்ட நெரிசலை பயன்படுத்தி அரசு பஸ்சில் 2 பெண்களிடம் தங்க நகையை மர்ம நபர்கள் திருடிச் சென்றனர்.
3 பவுன் நகை திருட்டு
கோவை ரத்தினபுரி பி.என். சாமி. காலனியை சேர்ந்தவர் வேலாயுதம். இவருடைய மனைவி வசந்தி (வயது 45). இவர் கணபதியில் வீட்டு வேலை செய்து வருகிறார். தீபாவளியையொட்டி வீட்டுக்கு தேவையான பொருட்களை வாங்க டவுன் பஸ்சில் கணபதிக்கு சென்று கொண்டிருந்தார். தற்போது தீபாவளி நெருங்கி வருவதால் பஸ்களில் கூட்டம் அதிகஅளவில் உள்ளது. இதேபோல் வசந்தி சென்ற பஸ்சிலும் கூட்டம் அதிகமாக இருந்தது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி டெக்ஸ் டூல் பாலம் அருகே பஸ் சென்றபோது இவரது கழுத்தில் அணிந்திருந்த 3 பவுன் தங்க செயினை யாரோ திருடிவிட்டனர். இதுகுறித்து வசந்தி காட்டூர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நகை பறிப்பு
இதேபோல கோவை செல்வபுரம் ராக்கப்ப கவுண்டர் லே-அவுட்டை சேர்ந்தவர் பூமா சந்திரன். இவருடைய மனைவி விலாசினி (வயது 53) வீட்டு வேலை செய்து வருகிறார்.இவர் டவுன்ஹாலில் இருந்து செல்வபுரத்துக்கு டவுன் பஸ்சில் சென்று கொண்டிருந்தார்.அப்போது கூட்ட நெரிசலை பயன்படுத்தி அவரது கழுத்தில் கிடந்த 2 பவுன் தங்க சங்கிலியை யாரோ திருடிவிட்டனர். இது குறித்து விலாசினி செல்வபுரம் போலீசில் புகார் செய்துள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் போலீசார் பஸ்களில் செல்லும் போது பயணிகள் கவனமுடன் பயணம் செய்ய வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து உள்ளார்கள்.