திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்


திட்டப்பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்
x

அனைத்து துறையில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

திருப்பூர்

திருப்பூர், செப்.14-

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து துறையில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர தமிழ்வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வுக்கூட்டம்

திருப்பூர் மாவட்டத்தில் அனைத்து துறைகளில் நடைபெற்று வரும் திட்டப்பணிகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்துக்கு கலெக்டர் கிறிஸ்துராஜ் முன்னிலை வகித்தார். தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தலைமை தாங்கி ஆய்வு மேற்கொண்டார்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி ஜெய்பீம், திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்குனர் லட்சுமணன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) வாணி மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் பங்கேற்றனர்.

திட்டப்பணிகள்

அனைத்து துறை செயல்பாடுகள் குறித்து முழு கவனம் செலுத்தி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தொலைநோக்கு திட்டங்கள் மற்றும் உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் ஆகிய திட்டங்கள் குறித்து ஆய்வு நடத்தப்பட்டது. அனைத்து துறை அலுவலர்கள் பங்கேற்றனர். வளர்ச்சி திட்டங்களில் முழு கவனம் செலுத்தி திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

2021-22-ம் ஆண்டு முதல் 2023-34-ம் ஆண்டு வரை சட்டமன்ற கூட்டத்தொடரில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள், அமைச்சரிடம் அளிக்கப்பட்ட கடிதங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுமக்களின் அடிப்படை தேவைகளை உடனுக்குடன் நிறைவேற்ற வேண்டும். வளர்ச்சி திட்டங்கள் அனைத்து தரப்பு மக்களுக்கும் சென்றடையும் வகையில் பணியாற்ற வேண்டும். திட்டப்பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும் என்று அமைச்சர் மு.பெ.சாமிநாதன், அனைத்துத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.


Related Tags :
Next Story