இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்


இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம்
x

நெல்லையில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திருநெல்வேலி

நெல்லை வண்ணார்பேட்டையில் இனப்படுகொலைக்கு எதிரான தமிழர் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஒருங்கிணைப்பாளர் பீட்டர் தலைமை தாங்கினார். தமிழக மக்கள் ஜனநாயக கட்சி தென்மண்டல செயலாளர் அப்துல் ஜப்பார், ம.தி.மு.க. நிர்வாகி சுதர்சன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் ஸ்ரீராம், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் லட்சுமணன் ஆகியோர் ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்து பேசினர்.

மணிப்பூரில் நடந்து வரும் பெண்கள் மீதான பாலியல் வன்முறை மற்றும் இனப்படுகொலைக்கு மத்திய-மாநில அரசுகளை விசாரணை செய்ய வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நேதாஜி சுபாஷ் சேனை தலைவர் மகாராஜன், பூலித்தேவர் மக்கள் முன்னேற்ற கழக நிர்வாகி பவானி வேல்முருகன், மாவீரர் சுந்தரலிங்கனார் மக்கள் இயக்க தலைவர் மாரியப்ப பாண்டியன், விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகி முத்துவளவன், ஆதித்தமிழர் பேரவை மாவட்ட செயலாளர் கலைக்கண்ணன், புரட்சி பாரதம் கட்சி மாவட்ட செயலாளர் நெல்சன், மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகி நெல்லை நிஜாம், மூவேந்தர் முன்னணி கழக நிர்வாகி மணிபாண்டியன், தமிழ் புலிகள் நிர்வாகிகள் தமிழரசு, மாடத்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story