தமிழிசை விழா


தமிழிசை விழா
x
தினத்தந்தி 21 March 2023 12:15 AM IST (Updated: 21 March 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon

கலை பண்பாட்டு துறை, மாவட்ட அரசு இசைப்பள்ளி சார்பில் தமிழிசை விழா நடந்தது

மயிலாடுதுறை

சீர்காழி:

கலை பண்பாட்டு துறை, தஞ்சாவூர் மண்டல கலை பண்பாட்டு மையம், மாவட்ட அரசு இசைப்பள்ளி, சவகர் சிறுவர் மன்றம் சார்பில் சீர்காழியில் தமிழிசை விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட அரசு இசைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி தலைமை தாங்கினார். தஞ்சை கலை பண்பாட்டு துறை மைய மண்டல உதவி இயக்குனர் நீலமேகம், விஸ்வநாதர் கோவில் அறங்காவலர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தார். விழாவை தமிழ் சங்க தலைவர் மார்கோனி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார். தொடர்ந்து மங்கல இசைகள், தேவாரப் பண்ணிசை, நாட்டியாஞ்சலி, பரதநாட்டியம் உள்ளிட்ட பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் தமிழ்ச்சங்க செயலாளர் கோவி நடராஜன், பொருளாளர் சொர்ணபால், மாவட்ட அரசு இசைப்பள்ளி ஆசிரியர்கள், இசை கலைஞர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். விழாவில் இசை கலைஞர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. முடிவில் மிருதங்க ஆசிரியர் முருகேசன் நன்றி கூறினார்.

1 More update

Next Story