தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு
தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாடு நடந்தத.
கரூர்
கரூரில் நேற்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி கரூர் மாவட்ட 4-வது மாநாடு நடைபெற்றது. இதற்கு வரவேற்புக்குழு செயலாளர் ஹோச்சுமின் தலைமை தாங்கினார். மாநில தலைவர் செல்லக்கண்ணு, மாநில துணை தலைவர் பழனிச்சாமி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர். மாநாட்டில் சாதி ஆணவ படுகொலைகளை தடுத்து நிறுத்த சிறப்பு தனிச்சட்டம் இயற்ற தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், உயர்கல்வி நிறுவனங்களில் நிலவக்கூடிய சாதிய பாகுபாட்டை களைந்திட கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதாள சாக்கடை பணிகளில் எந்திரங்களை பயன்படுத்த வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. தொடர்ந்து புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
Related Tags :
Next Story