கேண்டிடேட் செஸ் தொடரை வென்ற குகேஷுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வாழ்த்து


கேண்டிடேட் செஸ் தொடரை வென்ற குகேஷுக்கு தமிழக பா.ஜ.க தலைவர் அண்ணாமலை வாழ்த்து
x
தினத்தந்தி 22 April 2024 7:23 AM GMT (Updated: 22 April 2024 8:02 AM GMT)

உங்கள் உறுதியும் விடாமுயற்சியும் நமது தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது.

சென்னை,

'பிடே' கேண்டிடேட் சர்வதேச செஸ் போட்டி கனடாவின் டொரோன்டோ நகரில் நடைபெற்றது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற கடைசி சுற்று ஆட்டத்தில் இந்திய வீரர் குகேஷ் அமெரிக்காவின் நகருராவை சந்தித்தார். இந்த ஆட்டம் டிரா ஆனது. இதன் மூலம் குகேஷ் 9 புள்ளிகளுடன் முதல் இடம் பிடித்து கேன்டிடேட் சர்வதேச செஸ் தொடரை கைப்பற்றினார்.

இதன் மூலம் கேன்டிடேட் செஸ் சாம்பியன்ஷிப்பை இளம் வயதில் (17 வயது) வென்ற வீரர் என்ற பெருமையை பெற்ற குகேஷ் உலக செஸ் சாம்பியன்ஷிப்பில் சீனாவின் டிங் லிரெனை எதிர்கொள்ள உள்ளார்.

கேன்டிடேட்ஸ் செஸ் தொடரில் சாம்பியன் பட்டம் வென்ற குகேஷுக்கு பல்வேறு தரப்பில் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. இந்த நிலையில், குகேஷுக்கு தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைத்தளப்பக்கத்தில் வெளியிட்ட பதிவில்,

17 வயதில் பிடே போட்டியாளர்களை வென்று உலக சரித்திரம் படைத்ததற்காக கிராண்ட்மாஸ்டர் டி. குகேஷுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். உங்கள் உறுதியும் விடாமுயற்சியும் நமது தேசத்திற்குப் பெருமை சேர்த்துள்ளது. டி. குகேஷ், சதுரங்க உலகில் பெரிய இடத்தைப் பிடிக்க விரும்பும் அனைத்து இளம் திறமையாளர்களுக்கும் ஒரு உத்வேகம். இவ்வாறு அதில் பதிவிடப்பட்டுள்ளது.




Next Story