தமிழக பொது பட்ஜெட் 19-ம் தேதி தாக்கல் - சபாநாயகர் அப்பாவு


தமிழக பொது பட்ஜெட் 19-ம் தேதி தாக்கல் - சபாநாயகர் அப்பாவு
x
தினத்தந்தி 1 Feb 2024 5:31 PM IST (Updated: 1 Feb 2024 6:03 PM IST)
t-max-icont-min-icon

தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வருகிற 19-ம் தேதி தாக்கல் செய்கிறார் என்று சபாநாயகர் அப்பாவு கூறியுள்ளார்.

சென்னை,

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 12-ம் தேதி தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 12-ம் தேதி தொடங்குகிறது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் கவர்னர் உரையுடன் 12-ம் தேதி காலை 10 மணிக்கு பேரவை கூடுகிறது. தமிழக பட்ஜெட்டை நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு வருகிற 19-ம் தேதி தாக்கல் செய்கிறார். 20-ம் தேதி முன்பண மானிய கோரிக்கையும் 21-ம் தேதி முன்பண செலவு கோரிக்கையும் விவாதிக்கப்படுகிறது.

சட்டப்பேரவையில் யாரை எங்கு அமர வைக்க வேண்டும் என முடிவெடுக்கும் அதிகாரம் சபாநாயகருக்கே உள்ளது. சட்டப்பேரவை தலைவரை கோர்ட்டு கட்டுப்படுத்தாது. எந்த ஒளிவு மறைவும் அரசிடமும் சட்டமன்றத்திலும் இல்லை. சட்டப்பேரவை நிகழ்வுகளை முழுமையாக நேரலை செய்வது குறித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

1 More update

Next Story