தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
வீட்டுமனை பட்டா வழங்க வேண்டி தமிழ்நாடு விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
ராணிப்பேட்டை
ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலகம் எதிரே தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
கன்னிகாபுரம் கிராமத்தில் 50 ஆண்டுகளுக்கும் மேலாக பல குடும்பங்கள் வசித்து வருகின்றன. குடிநீர் வரி, மின் இணைப்பு, ஆதார் அட்டை மற்றும் குடும்ப அட்டை ஆகிய அனைத்து ஆவணங்களுடன் வசித்து வரும் நிலையில், தங்களுக்கு நீண்ட காலமாக வீட்டுமனை பட்டா வழங்க வேண்டுமென அவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். பல ஆண்டுகளாக வசித்து வரும் பொதுமக்களுக்கு கலைஞரின் நூற்றாண்டு விழாவில், வீட்டுமனை பட்டா வழங்க வேண்டும் என்று கோஷங்களை எழுப்பினர்.
இதில் முக்கிய நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.
Related Tags :
Next Story