தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 22 Feb 2023 12:15 AM IST (Updated: 22 Feb 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

விழுப்புரம்

விழுப்புரம்,

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நேற்று காலை தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் மற்றும் கோவில் மனை குடியிருப்போர் நலச்சங்கத்தின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு கோவில் மனை குடியிருப்போர் நலச்சங்க தலைவர் கணேசன் தலைமை தாங்கினார். இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சவுரிராஜன், விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் கலியமூர்த்தி, மாவட்ட தலைவர் சகாபுதீன், மாநிலக்குழு உறுப்பினர் லட்சுமி, மாவட்டக்குழு உறுப்பினர் மணிகண்டன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். குத்தகை விவசாயிகளின் பாரம்பரிய சாகுபடி நிலத்தை பறிக்கக்கூடாது, பாரம்பரியமாக வாழ்ந்து வரும் குடியிருப்பாளர்களின் வீட்டுமனையிலிருந்து அவர்களை வெளியேற்றக்கூடாது, இயற்கை பேரிடர் பாதிப்பு ஆண்டுகளின் குத்தகை பாக்கி மற்றும் வாடகை முறையில் மனைகளுக்கு விதிக்கப்பட்ட நிலுவைத்தொகையை ரத்து செய்ய வேண்டும், நீண்ட காலமாக சாகுபடி செய்துவரும் குத்தகை விவசாயிகளுக்கு நில உரிமை பட்டா வழங்க வேண்டும், கோவில் மனைகளில் வசிப்பவர்களுக்கு கருணை அடிப்படையில் மனைப்பட்டா வழங்க வேண்டும் என்பன போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் நிர்வாகிகள் ரமேஷ், தணிகைவேல், பாலு, மூர்த்தி, பாலசுப்பிரமணியம், மாசிலாமணி, ராமச்சந்திரன், ராதா, முருகேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


Next Story