தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்


தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் ஆர்ப்பாட்டம்
x

திருப்பத்தூரில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

திருப்பத்தூர்

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் திருப்பத்தூர் மாவட்டம் சார்பில் திருப்பத்தூர் கலெக்டர் அலுவலகம் எதிரில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கே.எம்.நேரு தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் கா.புவண்ணன் வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் ஞானசேகரன், மாவட்ட செயலாளர் எம்.அருள்மொழிவர்மன் ஆகியோர் தொடங்கி வைத்து பேசினார்கள்.

ஆர்ப்பாட்டத்தில் புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், மறுக்கப்படும் அகவிலைப்படி முடக்கப்பட்ட சரண்டர் விடுப்பை உடனே வழங்கிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். கூட்டுறவு சங்க சார் பதிவாளர் சதாசிவம், நவீன், ராஜேஷ், கண்ணன் உள்பட பலர் பேசினார்கள். இறுதியில் தேவகுமாரன் நன்றி கூறினார்.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தாலுகா அலுவலகம் எதிரில் வருவாய் துறை சார்பில் மாவட்ட துணைத் தலைவர் முரளி கிருஷ்ணன் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்ட கிளை தலைவர் ராஜீவ் காந்தி வரவேற்றார். இறுதியில் வருவாய் ஆய்வாளர் ராஜா நன்றி கூறினார்.

திருப்பத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஜி.ராஜா தலைமை தாங்கினார். ரமேஷ் வரவேற்றார். சிவலிங்கம் முன்னிலை வகித்தார். கலையரசன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட துணைச் செயலாளர் செந்தில் நன்றி கூறினார்.


Next Story