கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்துவிட கோரி ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம்


கிருஷ்ணா நதியில் தண்ணீர் திறந்துவிட கோரி ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம்
x
தினத்தந்தி 8 Aug 2023 4:23 AM GMT (Updated: 8 Aug 2023 4:41 AM GMT)

கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீரை திறந்துவிட கோரி ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது.

சென்னை,

நடப்பு நீர் வழங்கும் பருவத்தில் நேற்று வரை 1.03 டிஎம்சி நீரை ஆந்திரா திறந்துவிட்ட நிலையில் கண்டலேறு அணையில் தற்போது 16.6 டிஎம்சி நீர் மட்டுமே உள்ளது. தெலுங்கானாவில் தென்மேற்கு பருவமழை தீவிரம் அடையாத நிலையில் அதன் காரணமாக அணைகளில் இருந்து கண்டலேறு அணைக்கு நீர்வரத்து குறைய தொடங்கியுள்ளது. கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு நீர் திறப்பு குறைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கிருஷ்ணா நதியில் இருந்து தண்ணீரை திறந்து விடக்கோரி ஆந்திர நீர்வளத்துறைக்கு தமிழக அரசு கடிதம் எழுதியுள்ளது. இது தொடர்பாக எழுதியுள்ள கடிதத்தில், "ஆண்டுதோறும் வழங்க வேண்டிய தண்ணீரில் இந்தாண்டு குறைவான தண்ணீரே வழங்கப்பட்டுள்ளது.

நடப்பு நீர் வழங்கும் பருவத்தில் நேற்று வரை 1.03 டி.எம்.சி. நீரை மட்டுமே ஆந்திர அரசு விடுவித்துள்ளது. ஊத்துக்கோட்டை, ஜீரோ பாயிண்ட் எல்லைக்கு நேற்று வினாடிக்கு 39.5 கனஅடி நீர் மட்டுமே கிடைத்துள்ளது. எனவே சென்னையின் குடிநீர் தேவைக்கு ஆண்டுதோறும் 12 டி.எம்.சி. கிருஷ்ணா நதி தண்ணீரை ஆந்திர அரசு வழங்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளது.


Next Story