அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்!


அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டம்!
x
தினத்தந்தி 12 Oct 2023 10:53 AM IST (Updated: 13 Oct 2023 2:14 PM IST)
t-max-icont-min-icon

சென்னை செம்மஞ்சேரியில் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

சென்னை,

சென்னை பெருநகர் வளர்ச்சி குழுமம் சார்பில் செம்மஞ்சேரியில் உலகளாவிய அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்க தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது.

உலகளாவிய விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறு ஆய்வு மேற்கொள்ள, விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கவும் ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டுள்ளது. விருப்பமுள்ள நிறுவனங்கள் நவம்பர் 14-ம் தேதிக்குள் www.tntenders.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிநவீன விளையாட்டு நகரம் அமைக்கப்பட்டால் விளையாட்டுகளின் வளர்ச்சிக்கு ஊக்கம் அளிப்பதுடன், முன்னணி விளையாட்டுப் போட்டிகளின் முனையமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Next Story