'மேட்டூர் அணை நீர்திறப்பு தேதியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும்' - விவசாயிகள் கோரிக்கை


மேட்டூர் அணை நீர்திறப்பு தேதியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் - விவசாயிகள் கோரிக்கை
x

குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான தேதியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சேலம்,

சேலம் மாவட்டம் மேட்டூர் அணையில் இருந்து கடந்த ஆண்டு மே மாதம் தண்ணீர் திறக்கப்பட்டது. இதனால் டெல்டா மாவட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட இலக்கை தாண்டி குறுவை சாகுபடி நடைபெற்றதுடன், சாகுபடி பரப்பளவும் அதிகரித்தது.

இந்த நிலையில் மேட்டூர் அணையில் தற்போது 100 அடிக்கும் மேல் தண்ணீர் இருப்பதால் குறுவை பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதற்கான தேதியை தமிழக அரசு அறிவிக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். வேளாண் இடுபொருட்கள், உரம் மற்றும் விதைகள் போதிய அளவில் கையிருப்பில் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.

விவசாயக் கடன் வழங்குவதுடன், தூர்வாரும் பணியை போர்க்கால அளவில் மேற்கொள்ள வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனிடையே மேட்டூர் அணையை ஜூன் முதல் வாரத்தில் திறக்க வேண்டும் என மூத்த வேளாண் வல்லுனர் குழு பரிந்துரை செய்துள்ளது.
Next Story