பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்


பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் - டிடிவி தினகரன்
x

பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

சென்னை,

பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

"தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 12,000 பகுதி நேர ஆசிரியர்களுக்கும் தமிழக அரசு பொங்கல் போனஸ் வழங்க வேண்டும். 11 ஆண்டுகளுக்கு மேலாக பகுதி நேர ஆசிரியர்களாக மிகக்குறைந்த ஊதியத்தில் பணிபுரியும் அவர்களும் பண்டிகை நேரத்தில் மகிழ்ச்சியாக இருக்க வேண்டும்.

போனஸ் மட்டுமின்றி தி.மு.க தேர்தல் அறிக்கையில் வாக்குறுதியளித்தது போல பகுதி நேர ஆசிரியர்களை ஸ்டாலின் அரசு பணிநியமனம் செய்ய வேண்டும். எத்தனையோ வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டதைப் போன்று இந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல் ஆசிரியர் சமூகத்தை ஏமாற்ற நினைக்கக் கூடாது" என்று பதிவிட்டுள்ளார்.



Next Story