கொப்பரை தேங்காயை தமிழக அரசு கொள்முதல் செய்ய வேண்டும்
விலை குறைந்த நேரத்தில் நேபேடு விற்பனை செய்யும் கொப்பரை தேங்காயை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் ேகாரிக்கை விடுத்து உள்ளனர்.
விலை குறைந்த நேரத்தில் நேபேடு விற்பனை செய்யும் கொப்பரை தேங்காயை தமிழக அரசே கொள்முதல் செய்ய வேண்டும் என்று தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் ேகாரிக்கை விடுத்து உள்ளனர்..
கொப்பரை கொள்முதல்
கொப்பரை, தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் மத்திய அரசு விலை ஆதார திட்டத்தின் கீழ் கொப்பரை தேங்காய்க்கு கிலோவுக்கு ரூ.105.90 ஆதார விலையாக நிர்ணயம் செய்தது.
இதையடுத்து தமிழக அரசு ஒழுங்குமுறை விற்பனை கூடங்களில் கொள்முதல் மையங்கள் திறக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து கிலோ ரூ.105.90-க்கு கொப்பரை கொள்முதல் செய்யப்பட்டது.
இந்த நிலையில் தேசிய வேளாண்மை கூட்டமைப்பு விவசாயிக ளிடம் இருந்து கொள்முதல் செய்த கொப்பரைகளை விற்பனை செய்வதற்கு ஆன்லைன் டெண்டர் அறிவிப்பு வெளியிட்டு உள் ளது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.
இது குறித்து மாநில தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் கூட்டமைப்பினர் கூறியதாவது:-
நஷ்டம் ஏற்படும்
குறைந்தபட்ச ஆதார விலை திட்டத்தின் கீழ் விவசாயிகளிடம் இருந்து கொப்பரை கிலோவுக்கு ரூ.105.90-க்கு கொள்முதல் செய்யப்பட்டது. தமிழகத்தில் விவசாயிகளிடம் இருந்து 40 ஆயிரம் மெட்ரிக் டன் கொப்பரை தேங்காயை தேசிய வேளாண் கூட்டமைப்பு (நேபேடு) கொள்முதல் செய்து இருப்பு வைத்தது.
அவற்றை விற்பனை செய்வதற்கு நேபேடு நாளை (திங்கட்கிழமை) ஆன்லைன் டெண்டர் வெளியிட்டு உள்ளது. வழக்கமாக வெளி மார்க்கெட்டில் கொப்பரை விலை உயரும் போது நேபேடு லாபத்திற்கு விற்பனை செய்யும். ஆனால் தற்போது வெளிமார்க் கெட்டில் கொப்பரை விலை கிலோவுக்கு ரூ.80 உள்ளது. இந்த நேரத்தில் விவசாயிகளிடம் கொள்முதல் செய்த கொப்பரையை விற்பனை செய்வதால் சுமார் ரூ.150 கோடி வரைக்கு நேபேடு இழப்பு ஏற்படும்.
ரேஷன் கடைகளில் விற்பனை
வழக்கமாக கொள்முதல் செய்து 6 மாதங்கள் கழித்து தான் கொப்பரைகளை விற்பனை செய்வார்கள். தற்போது கொள்முதல் செய்த குறைந்த நாட்களிலேயே விற்பனை செய்கின்றனர். விலை குறைவாக இருக்கும் போது விற்றால் பெரிய எண்ணெய் நிறுவ னங்கள் ஒரு ஆண்டிற்கு தேவையான கொப்பரையை வாங்கி விடு வார்கள். இதனால் வெளிமார்க்கெட்டில் மேலும் கொப்பரை தேங்காய் விலை சரிந்து விடும்.
எனவே தமிழக அரசு அந்த கொப்பரைகளை வாங்கி, எண்ணெய்யாக மாற்றி ரேஷன் கடைகளில் விற்பனை செய்யும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.