புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி


புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது - அமைச்சர் அன்பில் மகேஷ் உறுதி
x

மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதியாக இருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் கூறினார்.

திருச்சி,

பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில்மகேஷ் பொய்யாமொழி திருச்சியில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது;

"புதிய கல்வி கொள்கையை தமிழ்நாடு அரசு ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது. பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் என்பதை தாண்டி திமுக காரனாக கண்டிப்பாக எதிர்ப்பேன். எந்நாளும் அதனை எதிர்ப்போம்.

கல்வியை பொது பட்டியலில் இருந்து மாநில பட்டியலில் கொண்டு வர வேண்டியதுதான் எங்களுடைய எண்ணம். மாநில கல்விக் கொள்கையை உருவாக்குவதில் தமிழக அரசு உறுதியாக உள்ளது. அதை நோக்கிதான் நாங்கள் செயல்படுகிறோம்.

ஒன்றிய அரசின் நவீன பள்ளிகள் தொடங்குவதற்கு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மட்டுமே கையெழுத்திட்டுள்ளோம். அதனால் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை ஏற்றுக்கொள்கிறோம் என்று அர்த்தமாகாது. குழு அமைத்து அதில் வேண்டியவற்றை மட்டுமே எடுத்துக்கொள்வேம்." இவ்வாறு அவர் பேசினார்.


Next Story
  • chat