வெள்ளப்பெருக்கை தமிழக அரசு திறமையாக கையாண்டது: சபாநாயகர் அப்பாவு பேட்டி


வெள்ளப்பெருக்கை தமிழக அரசு திறமையாக கையாண்டது:  சபாநாயகர் அப்பாவு பேட்டி
x

தமிழக அரசின் நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது என அப்பாவு கூறினார்.

நெல்லை,

நெல்லை மாவட்டம் மணிமுத்தாறு அணையில் இருந்து பிசான சாகுபடிக்காக இன்று தண்ணீரை சபாநாயகர் அப்பாவு திறந்து வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு கூறியதாவது,

கடும் நிதி நெருக்கடியில் மத்திய அரசு ஒரு ரூபாய் கூட தராத நிலையிலும் மிக்ஜம் புயல், தென் தமிழகத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவைகளை தமிழக அரசு திறமையாக கையாண்டுள்ளது. தமிழக அரசின் நடவடிக்கைகளால் மக்களுக்கு ஏற்படும் பாதிப்பு குறைக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story